குடிமகனை புரட்டி எடுத்த பெண்!

Filed under: இந்தியா |

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் தொல்லை கொடுத்தவரை அப்பெண் நடுரோட்டில் புரட்டி எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பனமாரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவர் வெங்கபள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அருகில் இருந்த இருக்கையில் இருந்த நபர் சந்தியாவிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சந்தியா அவரை வேறு சீட்டில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சந்தியா சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் மறுபடியும் அதே சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள் அவரை வேறு சீட்டில் மாறி உட்கார சொல்லியும் கேட்காமல், சந்தியாவை தாக்கியும் உள்ளார். இதனால் கோபமடைந்த சந்தியா அந்த ஆசாமியை பேருந்திலிருந்து கீழே தள்ளி இறங்கி வந்து அந்த ஆசாமியை நையப்புடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சந்தியாவிற்கு பாராட்டுகளும் குவிகின்றன.