தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வளர்க்கும் தேசிய பறவையான மயில்களுக்கு உணவு வைக்கும் வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 1.47 நிமிடங்கள் கொண்ட வீடியோ கண்களை கவர்கிறது. அந்த வீடியோவில் காலை உடற்பயிற்சி செய்யும் போது அவரின் வீட்டில் மயில்களுக்கு உணவு வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது.

அந்த வீடியோ உடன் இந்தியில் ஒரு கவிதையும் பகிர்ந்துள்ளார்.