குடியரசு தலைவர் புத்த பூர்ணிமா வாழ்த்து!

Filed under: இந்தியா |

புது டெல்லி,மே 06

புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :

புத்த பூர்ணிமா சுபதினத்தையொட்டி, எனது சக குடிமக்கள் அனைவருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள புத்த பகவானைப் பின்பற்றுபவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றுடன் அஹிம்சை அடிப்படையில் மனிதநேயத் தொண்டாற்ற புத்தபகவானின் போதனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன. அவரது வாழ்க்கையும், இலட்சியங்களும், சமத்துவம், நல்லிணக்கம், நீதி போன்ற நிலைத்து நிற்கும் விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.

கொவிட்-19 என்ற தொற்றின் வடிவத்தில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்க நாம் முன்வருவதன்  மூலம் புத்த பகவான் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். பக்தி மயமான இந்தப்பண்டிகை புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்ற நமக்கு ஊக்கமளிப்பதுடன், நம்மிடையே நல்லிணக்கத்தைப் பேணும் சிந்தனையை வலுப்படுத்தட்டும்.