குடும்பத்துடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால் காரணம் என்ன?

Filed under: இந்தியா,சினிமா |

மலையாள திரையுலகில் மிக முக்கியமான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.. நடிகர் மோகன்லாலின் நண்பர் என்பதுடன், மோகன்லாலின் வலதுகை போல விளங்குபவர்.. மோகன்லால் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் அவரது நிழல் போல கூடவே இருப்பவர்..

தன்னிடம் கார் ட்ரைவராக உதவியாளராக சேர்ந்த ஆண்டனிக்கு, ஆசீர்வாத் சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி கொடுத்து, தனது படங்களை தொடர்ந்து தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து, அவரை தயாரிப்பாளராக மாற்றி அழகு பார்த்தவர் மோகன்லால்.

ஆண்டனி பெரும்பாவூரின் மகள் டாக்டர் அனிஷா-டாக்டர் எமில் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் மோகன்லால்.

இந்த நிகழ்வின்போது மோகன்லால் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரேமாதிரியான உடைகளை அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.