குண்டுகள் முழங்க மறைந்த பாடகருக்கு மரியாதை!

Filed under: இந்தியா |

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிரபலமான பாடகரான கே.கே.வுக்கு குண்டுகள் முழங்க மரியாதை செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பிரபல பாடகரான கே.கே. இவர் கலந்து கொண்ட கல்லுரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இவரது முழுப்பெயர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார். பல ஆயிரம் விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளளனர். பாடகர் கே.கே உடலுக்கு மேற்கு வங்க விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.