குரங்கு அம்மையால் 2வது நபர் பாதிப்பு!

Filed under: இந்தியா |

குரங்கு அம்மை நோயால் ஏற்கனவே கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது இரண்டாவது நபர் ஒருவருக்கும் குரங்குஅம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில் “குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். வாயின் உள்பகுதியில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.