கடந்த மே மாதம் 21ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2ஏ, மற்றும் குரூப் 4 நடைபெற்ற தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இத்தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப் -4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இத்தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர். இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.