குளத்தில் மூழ்கிய சம்பவம் குறித்து அமைச்சர் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தீர்த்தவாரி குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

நேற்று சென்னை அருகே மூவரசம்பட்டியிலுள்ள குளம் ஒன்றில் 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார். சென்னையை அடுத்த மூவரசம்பட்டியிலுள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது. குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து அறநிலைத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் இனிமேல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது அறநிலையத்துறைக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.