சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “ஓ2” திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்திருந்த சிறுவன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் பேரனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது டாப் ஹிட்டாகிவிட வேண்டுமென்ற முழு முயற்சியோடு இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது இப்படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாகவும், ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பேரன் கேரக்டரில் ரித்விக் என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ‘ஓ2’ படத்தில் அவருடைய மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.