பொதுமக்கள் எல்ஐசி ஐபிஓ வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி எல்ஐசி ஐபிஓ பங்குகளை 95 சதவீத பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 கோடியே 11 லட்சம் பங்குகளை விற்க எல்ஐசி முடிவு செய்துள்ள நிலையில் 2-வது நாளான இன்று வரை 95 சதவீத விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்று மடங்கு விண்ணப்பங்களும் எல்ஐசி ஊழியர்களுக்கு 7 சதவீத பங்குகளை ஒதுக்கப்பட்ட நிலையில் இரண்டு மடங்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது