கூகுள் செய்தி இயக்குநர் திடீர் பணி நீக்கமா?

Filed under: உலகம் |

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா என்பவர் கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தார். ஆனால் அவரை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் 2010ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தனது பணி தொடங்கியதாகவும் 13 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தது எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வரை தனது பணிகள் மன நிறைவை தந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் நியூஸ் நிர்வாக அதிகாரியாக அவர் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் 12000 ஊழியர்களுக்கு மேல் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென செய்தி நிறுவனத்தின் இயக்குனர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.