கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.