கூட்டு பலாத்காரம் செய்த கஞ்சா கும்பல்!

Filed under: இந்தியா |

கேரளாவில் நண்பரின் மகளை கூட்டு பலாத்காரம் செய்த கஞ்சா கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் புன்னயூர்குளம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியின் மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக மாணவியின் தாயார் அடிக்கடி மலப்புரம் வரை சென்று வந்துள்ளார். அதனால் தனது கணவரின் கூட்டாளிகளிடம் தனது மகளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லியுள்ளார். மாணவியின் தாய் மலப்புரம் செல்லும்போதெல்லாம் அங்கு வந்த மாணவியின் தந்தையின் கூட்டாளிகள் மூன்று பேர் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதோடு அடிக்கடி மாணவியை வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ஒருநாள் மாணவி பள்ளியில் மிக சோர்வாக அமர்ந்திருப்பதை கண்டு அவரது ஆசிரியர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றபோது அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாணவியின் ஆசிரியை குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மூவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.