கேஜிஎப் நிறுவனத்தால் கைவிடப்பட்ட சிம்பு!

Filed under: சினிமா |

ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் நடிகர் யாஷ் நடித்த “கேஜிஎப்” மற்றும் “கேஜிஎப் 2” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியது. இந்நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனெனில், சுதா கொங்கரா இப்போது இந்தியில் “சூரரைப் போற்று” ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்து பாராட்டுகளைக் குவித்து வரும் “காந்தாரா” படத்துக்காக கேக் அனுப்பி வாழ்த்தியிருந்தார் சிம்பு. இதன் மூலம் இந்த கூட்டணி இணைவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்படத்துக்காக சிம்பு கேட்ட சம்பளம் அந்நிறுவனத்துக்கு ஒத்து வராததால், பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்துள்ளது. ஆனால் சிம்பு தரப்பு இறங்கி வரவேயில்லை. அதனால் படக்குழு அப்படத்தையே கைவிட்டு விட்டார்களாம்.