நடிகர் யாஷின் “கேஜிஎஃப் 2” படத்தின் வசனத்தை சற்றே மாற்றியமைத்து அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “கேஜிஎப் 2.” இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
படத்தில் ராக்கி பாய் டேஞ்சர் போர்டை நிமிர்த்தி வைத்துவிட்டு “எனக்கு வன்முறை பிடிக்காது.. ஆனால் வன்முறைக்கு என்னை பிடிக்கும். அதனால் என்னால் தவிர்க்க முடியாது” என ஆங்கிலத்தில் வசனம் பேசுவார்.
அந்த புகழ்பெற்ற வசனத்தை திருமண பத்திரிக்கை ஒன்றில் “எனக்கு திருமணம் பிடிக்காது. ஆனால் என் சொந்தக்காரர்களுக்கு பிடிக்கும். அதனால் என்னால் தவிர்க்க முடியாது” என்று மாற்றி அச்சிட்டு வைரலாக்கியுள்ளனர்.