சிம்பு கொடுத்த அட்வைஸ் மிகவும் உதவியது – விஷ்ணு விஷால் புகழாரம்!

Filed under: சினிமா |

கொரோனா வைரஸ் காரணத்தினால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய பணிகளைத் தவிர்த்து பிற திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பல நபர்களை பேட்டி எடுத்து வருகிறார். இவர் நடிகர் மாதவனை எடுத்த பேட்டி .பெரிய அளவில் வைரல் ஆகியது.

அதன் பின்னர் பல நபர்களை பேட்டி எடுத்துள்ளார். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி எடுத்தார். அதில் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து எப்படி சினிமா பக்கம் சென்றிர்கள் என அஸ்வின் கேட்ட கேள்விக்கு விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்.

அதில் விஷ்ணு விஷால் சிம்புவை புகழ்ந்துள்ளார். படப்பிடிப்பு சமயத்தில் லைட்னிங் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது சிம்புவை பற்றி விஷ்ணு விஷால் புகழ்ந்தார். ராட்சஸன் படத்தின் படம் சமயத்தில் சிம்புவை சந்தித்தேன். அப்போது ஒரு ஆறு மணி நேரம் அவருடன் இருந்தேன். எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். திரையுலகில் எனக்கு முதல் நண்பர் சிம்பு. ஆனால், சில நாட்கள் அவருடன் பேசவில்லை. அவர் மிகவும் திறமைசாலி. அவர் கற்று கொடுத்ததை நான் படப்பிடிப்பில் செய்து பார்த்தேன் எனக்கு மிகவும் உதவியது.

சிம்பு சிறு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இயக்கம், இசை என அனைத்துமே செய்யக்கூடியவர். இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் எனக்கு உதவியாக இருந்தது.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.