கேரளாவில் போதை பொருளுடன் நடிகர் கைது!

Filed under: இந்தியா |

மலையாள நடிகர் உள்பட 2 பேரை போதைப்பொருட்களுடன் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிலர் போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில், அப்பகுதி வழியாகக் காரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 5 கிராம் அளவிலான போதைப் பொருள் (எம்டிஎம்ஏ) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அருண் மற்றும் குமாரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், அருண் என்பவர் மலையாள சினிமாவில் சில படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.