மேற்கு வங்கம்; கேரளாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது – என்.ஐ.ஏ தகவல்!

Filed under: இந்தியா |

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாதிலும், மற்றும் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளத்திலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு இன்று அதிகாலை என்.ஐ.ஏ தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது.

அதில் தேடுதல் வேளையில்; மேற்கு வங்காள மாநிலத்தில் 6 தீவிரவாதிகளும், கேரளா மாநிலத்தில் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த மாநிலத்துக்கு உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் மற்றும் மக்களை கொல்லவும் திட்டமிட்டுள்ளதாக என்.ஐ .ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நபர்கள் பாகிஸ்தானை மையமாக கொண்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பால் சமூக ஊடங்களில் தீவிரமயமாக்கப்பட்டனர். இதை அடுத்து இவர்கள் டெல்லிஎன்.சி.ஆர் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

முர்ஷித் ஹசன், இயாக்குப் பிஸ்வாஸ், மொசரஃப் ஹொசைன், நஜ்முஸ் சாகிப், அபூ சூஃபியன், மைனுல் மொன்டல், லியூ இயன் அகமத், அல் மமுன் கமல் மற்றும் அதிதுர் ரஹ்மான் ஆகிய ஒன்பது பெரும் தான் அந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.