கொரோனவை வென்று தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட ட்டும் – பால் முகவர்கள் சங்கம்

Filed under: தமிழகம் |

சென்னை, ஏப்ரல் 30

செங்குருதியை வியர்வையாய் சிந்தி உழைத்த தொழிலாளர் வர்க்கம் இன்று கொரானாவெனும் கொள்ளை நோயினால் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டு, கட்டுண்டு கிடக்கிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை.

பொன்னுசாமி

எஜமானர்களை ஏணியாக இருந்து உயர்த்தி விட்டு, ஓய்வென்பதையே அறியா உழைக்கும் கரங்கள் இன்று வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வைக்கப்பட்டுள்ளது வேதனை.
உழைப்பதினால் சொற்ப வருமானமே கிடைத்தாலும் அதில் அளப்பரியா சந்தோசம் கண்டு, மகிழ்ச்சி கடலில் நீந்தி வந்த தொழிலாளர்கள் வர்க்கம் ஊரடங்கு காரணமாக இன்று வாழ்வாதாரத்தை இழந்து, உணவிற்காக கையேந்தி நிற்கும் அவலநிலையை காண்கையில் மனம் சொல்லெனா துயரடைகிறது.
இந்நிலை மாறிட கொரானாவை வென்று உலகெங்கும் இயல்பு நிலை திரும்பிடவும், இருண்டு போன உழைப்பாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம் பரவிடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டு அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி நிலவிடவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை நாளாம் மே தின நல் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதில் உள்ளபடியே அகம் மகிழ்கிறோம்.