கொரோனா தடுப்பு பணிகளுக்காக அறநிலையத் துறை சார்பில் நிவாரண நிதி !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : தமிழக மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில் பணியாற்றும் 3500 திருக்கோயில் பணியாளர்கள்.

தங்களது ஒரு நாள் ஊதியம் ரூபாய். 52,50,000/- கொரோனா சிகிச்சைக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை வழங்கும் வகையில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.