கொரோனா தொற்று தடுப்புபணிகள் குறித்த துணை முதல்வர் ஆய்வு !

Filed under: தமிழகம் |

சென்னை : தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ்மாநிலம் முழுவதும்உள்ள 19,533 அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளிலும், 1,253 வாரிய வாடகைக் குடியிருப்புகளிலும், கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கென, பெட்ரோல் மூலம் இயக்கப்படும் தெளிப்பான் -25, கை அழுத்ததெளிப்பான்- 86, முதலான கருவிகளும், கிருமி நாசினி திரவம்- 1600 லிட்டர் , கை சுத்திகரிப்பான், முககவசம், கையுறை, முககண்ணாடி, உடல் கவசம் ஆகியவை வாங்கு வதற்காக, அரசால் ரூ.78.94  இலட்சம், வாரிய வாடகைக் குடியிருப்புகளுக்காக வாரியத்தின் நிதியிலிருந்து, ரூ.14.15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் வாங்கப்பட்டுள்ளன. 471 பணியாளர்கள் மூலம் கோரோனா நோய் தடுப்பு பணிகள் தினமும் நடைபெற்று வருகின்றன.

  • சென்னைப் பெருநகரவளர்ச்சிக் குழுமம் :

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் 10 சுரங்கப்பாதை கிருமி நாசினி தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா நோய்த் தடுப்பு சம்மந்தமான பணிகள், தொடர்ந்து தினமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 08/04/2020 ஆம் தேதியில் இருந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் கூட்டுறவு துறையின் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 2500 குடும்பங்களுக்கு, 100 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் சுமார் 104.69 மெட்ரிக் டன் தரமான காய்கறிகள் குறைந்த விலையில் அந்தந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வழங்கப்பட்டு உள்ளன. தனிநபர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இணையதளத்தில் ஆர்டர் செய்து SWIGGY, ZOMATO மற்றும் DUNZO ஆகிய வீட்டு விநியோக நிறுவனங்கள் மூலம் இதுவரை 13.50மெட்ரிக் டன் காய்கறிகள் அங்காடி நிர்வாகக் குழு  நிர்ணயித்த விலையில் வழங்கப்பட்டுள்ளன.

  •  தமிழ்நாடுகுடிசைப்பகுதிமாற்றுவாரியம் :

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம், சென்னை மற்றும்  இதர நகரங்களிலுள்ள 305 திட்டப் பகுதிகளில் பராமரிக்கப்படும் 1.49 இலட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1.88 கோடி திட்ட மதிப்பீட்டில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிருமி பரவுதலை தடுக்க ரூ.41 ,76,000 செலவில் 23,200 லிட்டர் கிருமி நாசினி,      ரூ. 1,80,000 செலவில் 6டன் பிளிச்சிங்  பவுடர் வாங்கப்பட்டு, 126- பெட்ரோல் தெளிப்பான்கள், 5 ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஆகிய வற்றை பயன்படுத்தியும் 126 பணியாளர்கள் மூலமும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தினமும் நடைபெற்றுவருகின்றன. கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்காக கீழ்கண்ட 1,176 அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏற்கெனவே அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

  1. அரியலூர்       – குரும்பன்சாவடி – 288 குடியிருப்புகள்
  2. பெரம்பலூர்    – துரைமங்களம் – 504 குடியிருப்புகள்
  3. தஞ்சாவூர்       – வல்லம் – 384 குடியிருப்புகள்

சென்னையிலுள்ள கீழ்க்கண்ட 1,472 குடியிருப்புகள், கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்காக நாளை (12.04.2020) சென்னை பெருநகர மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

  1. வியாசர்பாடி – கே.பி.பார்க் பகுதி -1 – 864 குடியிருப்புகள்
  2. திருவொற்றியூர் – நல்லதண்ணீர் ஒடைகுப்பம் – 480 குடியிருப்புகள்
  3. திருவொற்றியூர் – இந்திராகாந்திகுப்பம் – 128 குடியிருப்புகள்

கொரோனா நோய் தொற்று பணியினை மிகவும் துரிதமாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி (ம) நகர்ப் புறவளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலர் ராஜேஷ்லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் – செயலர் முனைவர் த. கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் ப. முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.