கோவை, ஏப்ரல் 24
வே. மாரீஸ்வரன்
கோவை மாநகரத்தில் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடக் கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களின் பசி, பட்டினியை போக்க கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண அன்னதானத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தா. குணா, கோவை கோட்ட செயலாளர் சதீஷ், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சி. தனபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிவாரண மகா அன்னதான விழாவில் கோவை பிரபல தொழில் அதிபர்களான கோவை ஆவின் எம். எஸ். காமராஜ் பாண்டியன் மற்றும் சத்தியவான் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு அன்னதான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை நிரூபிக்கும் வகையில் கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.