கொரோனா வைரஸ் : பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Filed under: தமிழகம் |
கோவை ஏப்ரல், 21
 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை ரேபிட் சோதனை கருவி மூலம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் நெற்றிக்கண் வார இதழ் கோவை மாவட்ட தலைமை நிருபர் வே. மாரீஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர்.
 
முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி சோதனை குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கணிசமான நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
 
கோவை மாநகரில் 10 பகுதிகளும், மாவட்டத்தில் 8 பகுதிகளும் தனிமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையிலும் மருத்துவப் பணியாளர்கள் கள ஆய்விலும் ஈடுபட்டு உள்ளனர். யார் மூலமும் தோற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றி வருவதாகவும் கோவை மாவட்டத்திற்கு 2000 ரேபிட் கருவிகள் வந்துள்ளது. அதில், 1000 ரேபிட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூடுதலாக 1200  கருவிகள் கோவைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.
 
புதிய ரேபிட் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டது அதில் எட்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. நாளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்றார்.
 
மேலும், எங்கெல்லாம் தேவை உள்ளதோ அங்கெல்லாம் ரேபிட் கருவி மூலம் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு தொடர்பாக அங்குள்ள பிரசவ வார்டு சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டுள்ளது.  மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மூன்று பேரை தவிர மற்றவர்களுக்கு பயணம் வரலாறு உள்ளதாகவும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த வால்பாறை மற்றும் ஊஞ்ச வேலம்பட்டி, ஆத்துப்பாலம், பகுதிகளில் மூன்று பெண்களுக்கு டிராவல்  ஹிஸ்டரி இல்லை. பிரசவ வார்டு மீது உள்ள சந்தேகத்தின் காரணமாக அந்த வார்த்தை மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.