முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனை முடிவில் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது.

முதல்வருக்கு நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது.