கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

Filed under: உலகம்,விளையாட்டு |

முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார்.

பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் அணிகளில் ஒன்றாக இருந்த புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்வீட் பதிவில், “ஒரு குழந்தை இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. அந்த குழந்தை, தன்னுடைய தந்தையை போல இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நம்புவோம். இல்லையென்றால் தாயைப் போல ஒரு சினிமா நடிகராக வருமா?” என கூறியுள்ளார். இந்த ட்வீட் மறைமுகமாக கோலி மற்றும் அனுஷ்காவின் இரண்டாவது குழந்தையின் பிரசவத்தைப் பற்றிதான் குறிப்பிடுகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.