கோவிட் 19 : டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுடன் இணையும் காப்பீட்டுத் துறை!

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

 ஏப்ரல் 27

  • எதிர்பாராத அளவிற்கு உலகையே உலுக்கி வரும், உலகுக்கே சுகாதார சவாலாக உள்ள கோவிட் 19 நோயால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, பலமுனை அணுகுமுறையை அரசு எடுத்து வருகிறது. இந்நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் பங்காற்றும் முன்னணிப் போராளிகளுக்கு காப்பீட்டுத் துறை, உடல்நலக் காப்பீடு வழங்கி அரசின் முயற்சிகளுக்கு, பயனுள்ள முறையில் உதவி புரிந்துள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் 15 ஏப்ரல், 2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி திருத்தியமைக்கப்பட்ட SOP விதிமுறைகளின்படி, அனைத்து துறைகளிலும் உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும் முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தொழில் துறை நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், பணியிடங்கள், அலுவலகங்கள், தலங்கள் அனைத்திலும் உள்ள பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்துப் பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியக் காப்பீட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் வளர்ச்சிக் கழகம் ஐஆர்டிஏ ஆணையிட்டுள்ளது.
டாக்டர் நவீன் பிரபு
  • அரசு உத்தரவுகளைப் பின்பற்றும் வகையில் மேற்குறிப்பிட்ட அமைப்புகள் அனைத்துக்கும், அந்த அமைப்புகளின் தனிநபர்கள் அல்லது குழுவினருக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority.- IRDA) தனது சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பாலிசிகள் எளிமையான வார்த்தைகளும், எளிமையான நிபந்தனைகளும் கொண்டவையாக, அமைப்புகளால் பாலிசி பிரீமியம் தொகையை செலுத்தக் கூடிய வகையில், முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அனைத்து பணியாளர்களுக்கும், மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகளில், இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஏனென்றால், இது பணியாளர்களின் உடல்நலத்தை உறுதி செய்ய வகை செய்யும். இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், இந்த நடவடிக்கை அமையும். கோவிட் 19 நோய்க்கு எதிராகப் பணிபுரியும், முன்னணிப் போராளிகள் அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு வழங்குவது என்று அரசு மேற்கொண்டுள்ள முடிவு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
Dr. துரைக்கண்ணன் செயலர் இந்திய மருத்துவர் சங்கம்
  • மருத்துவர்: மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது என்ற பிரதமரின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இந்திய மருத்துவக் கழகம், கோயம்புத்தூர் அமைப்பின் செயலர் டாக்டர் துரைக்கண்ணன் கூறியுள்ளார். இது, இந்தக் கொடிய வைரசுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
  • உலக அளவிலான கோவிட்-19 நோய்த் தொற்றை திறமையாகக் கையாள்வதற்காகவும், தங்களது உயிரைப் பணயம் வைத்து கோவிட்-19 நோய்க்கு எதிராகப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வசதி வழங்கியதற்காகவும் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் நவீன் பிரபு நன்றி தெரிவித்தார்.
அமிர்த வேணி செவிலியர்
  • தங்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான அதிகபட்ச வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தபோதிலும், அதை கண்டு அஞ்சாமல், கோவிட்-19 நோய்க்கு எதிராகப் பணியாற்றும் அனைத்து முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கும் – தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகிய அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதி வழங்கியதற்காக  ஸ்டாஃப் செவிலியராகப் பணிபுரியும் திருமதி. அமிர்தவேணி அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
  • கோவிட் – 19 நோய்க்கு எதிராகப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் முழு மருத்துவக் காப்பீட்டு வசதி செய்யப்படுவது மிகவும் அவசியம் என்றும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது மிகவும் பாராட்டத்தக்கது என்றும் கோயம்புத்தூரில் ஆயுள் கப்பீட்டுக் கழகத்தில் முகவராகப் பணியாற்றும் திரு ஜி சம்பத் கூறியுள்ளார்.
  • பல்வேறு காப்பீட்டு பாலிசிகளை வைத்துள்ள பாலிசிதாரர்களுக்கு அரசு நிவாரணம் அளித்துள்ளது. சுகாதார மற்றும் மூன்றாம் நபர் போக்குவரத்துக் காப்பீடு பிரீமியம்- தவணைத் தொகைகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது. தேசிய அளவிலான பொது முடக்கக் காலத்தின்போது தவணைத் தொகையை செலுத்த முடியாத பாலிசிதாரர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.
  • பிரீமியம் செலுத்துவது தாமதமான போதிலும், அந்தக் காலத்திலும் பாலிசிதாரர்களுக்கு தொடர்ந்து காப்பீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதும் இதில் அடங்கும்.
  • கொரோனா வைரஸ் நோயால் வர்த்தக செயல்பாடுகள் தடைபட்டுள்ளன; தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; பள்ளிகள் கல்லூரிகள் இயங்குவதில்லை; ஏழை மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த மிகக் கடினமான காலகட்டத்திலும், குடிமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நலனைப் பேணுவதையும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.