கோவையில் சோகம்!

Filed under: தமிழகம் |

பிரபல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் என்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், ஈரப்பதம் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததா? அல்லது கட்டுமான பணியின் போது சுவர் இடிந்ததா? என்பது விசரணைக்கு பிறகே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த 4 பேரில் 3 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் வட மாநில தொழிலாளி எனவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.