கோவை, ஜூன் 14
கிணறு வெட்ட போகும் போது, பூதம் வந்த கதையாக சென்றுகொண்டிருக்கிறது திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் தேவாலயத்தில் நடந்து வரும் கோடிக்கணக்கான ஊழல் புகார்கள், விசாரணைக் கமிஷன் ஆவணங்களை திருடி செல்வது, ஆயர் தலைவரான வில்சன் குமாரின் சட்ட விரோத செயல்களால் இன்று கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் பணிபுரியும் சில நேர்மையான ஆயர் மற்றும் சபை விசுவாசிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்களாம்.
கடந்த வாரத்திற்கு முன்பு திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய ஆயர்தலைவர் வில்சன் குமார் தனக்கு ஜால்ரா போடும் சில ஆயர்களை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூரில் உள்ள சி.எஸ்.ஐ. டயோசீசனுக்கு சென்று அலுவலகத்தில் இருந்த பிஷப் திமோத்தி ரவீந்தரை பேராயர் என்றும் பாராமல் என்னை இடமாற்றம் செய்து பார். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பார்.. என்று ரவுடியை போன்று பேராயர் திமோத்தி ரவீந்தரை மிரட்டிவிட்டு சென்றார்களாம். இதனால் அப்செட்டான பேராயர் திமோத்தி ரவீந்தர் ஆயர் வில்சன் குமார் இடமாறுதல் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து நேர்மையாக பணி புரியும் ஆயர் ஒருவர் இத்தகவலை நம்மிடத்தில் பதிவு செய்தார்.
நாம் திருப்பூர் ஏரியாவில் உள்ள ஆயர் ஒருவரிடம் நமக்கே உரித்தான பாணியில் பேச்சு கொடுத்தோம். அப்போது சார்… கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் ஏரியா சேர்மன் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, இரண்டு தடவை ஆயர் வில்சன் குமார் பதவியில் இருந்து விட்டார். தற்போது, நடைபெறுகிற ஏரியா சேர்மன் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயர் எட்வின் ராஜ்குமார் என்பவர் தயாராகி வருகிறார். அதில், வில்சன் குமாரின் பெயர் பல ஆயர்களிடம் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. அவர்கள் வெளியில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்கள். அத்துடன், சமீபத்தில் வில்சன் குமார் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பேராயர் திமோத்தி ரவீந்தர் வில்சன் குமாரை இடமாறுதல் செய்து விட்டு திருப்பூர் தூய பவுல் சர்ச்சுக்கு எட்வின் ராஜ்குமாரை நியமனம் செய்ய இருந்த போது தான் கடந்த 4/6/2020/ அன்று வியாழக்கிழமை வில்சன் குமாரின் தலைமையில் சென்ற குரூப் பேராயரை ஒருமையில் பேசி மிரட்டி சென்றது.
எப்படியாவது திருப்பூர் தூய பவுல் ஆலயம் ஆயர் பதவியை தக்க வைப்பதற்காக ஆயர் வில்சன் குமார் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளாராம். அதில், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் சமாதானத் தூதுவர்களாக சில பேர்களுக்கு கடந்த 11/6/2020 அன்று அனுப்பிய கடிதத்தில் கிறிஸ்துவுக்குள் அண்ணன் அவர்களுக்கு… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்க. நமது ஆலயத்தில் சமாதானத்தைக் கொண்டுவரும் பொருட்டு வியாழன் 18/6/2020 அன்று மாலை 5 மணிக்கு நிர்வாகக் குழுவுடன் இணைந்து சமாதான கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஆயர் வில்சன் குமார் கையெழுத்திட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்த சமாதான கூட்டம் எதற்கு என்றால்.? வில்சன் குமாரின் ஊழல்களையும் அவரது சட்டவிரோத செயல்களை நெற்றிக்கண் டாட் காம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. சி.எஸ்.ஐ. சர்ச் தவறுகளை சுட்டிக் காட்டுவதால் நிர்வாகத்தில் நடக்கும் பிரச்சினைகள் வெளியே தெரியக்கூடாது என்பதால், தற்போது சமாதான கூட்டம் நடத்துகிறார்கள். திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் ஆயராக உள்ள வில்சன் குமார் தனது நிர்வாகத்தில் கல்லறை தோட்டம் கமிட்டி உறுப்பினர் கூட காசு வாங்காமல் பதவி போட மாட்டாராம்.. கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்தி ரவீந்தர் ஆயர் வில்சன் குமாரை போன்ற மலை பாம்புகளிடம் சிக்கிய புள்ளிமானை போன்று தன்னை தற்காத்துக் கொள்ள போராடி வருகிறார் என்று மேற்படி தகவலை நம்மிடத்தில் கூறினார். மேய்ப்பவர் நேராகச் சென்றால் தானேமந்தைகள் நேராகச் செல்லும்ஆமென்.