கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அக்கப்போர்! மதில்மேல் பூனையாக தலைமை பேராயர் !!!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூலை 3

கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் தற்காலிக அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராகவும், மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் ஆயராக இருந்து வந்த கருணாகரன் என்பவர் கடந்த 1/7/ 2020/ அன்று வயதின் முதிர்வின் காரணமாக ஆயர் பதவியில் இருந்து  ஓய்வு பெற்றார்.

ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுவார் என்று திருப்பூர் பவுல் சர்ச் அட்டகத்தியும், அவரது கூட்டாளியான உப்புகாரனும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே நேரத்தில் தான் சிபாரிசு செய்து அனுப்பிய டேவிட் பர்னபாஸ்  என்பவரை மாடரேட்டர் தர்மராஜ் ரசலம் நாடார் எப்படியும் டிக் செய்து அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக போட்டு விடுவார் என்று கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் பிஷப் திமோத்திரவிந்தரும் எதிர்பார்ப்பில் இருந்தாராம். அத்துடன் எனது பெயர் வந்து விடும், உனது பெயர் வந்துவிடும், என்று சிலர் எதிர்பார்த்திருந்த நிலையில் மீசைக்கார அண்ணாச்சியும் எப்படியும் நான் செயலாளராக வந்துவிடுவேன் என்று கனவில் மிதந்து கொண்டிருந்தாராம்.

ஆனால், பிஷப் திமோத்தி ரவிந்தரின் சித்து விளையாட்டில் பல ஆயர்களும், லே மேன்களும் ஒருவருக்கொருவர் கர்புர் என்று உறுமிக் கொண்டு வந்தனர். இதில் பிஷப் சிபாரிசு செய்த டேவிட் பர்னபாஸ் என்பவரை பற்றி தலைமை பேராயருக்கு பல புகார்கள் சென்றன. அதில், டேவிட் பர்னபாஸ் ஒழுக்கம் இல்லாதவர் என்று பல காரணங்களை கூறி புகார் கடிதங்கள் சென்றதாம்.

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் இருந்து சென்ற பல புகார் கடிதங்களை பார்த்த தலைமை பேராயர் தர்மராஜ் ரசலம் நாடார் அந்தப் புகார் கடிதங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பிஷப் சிபாரிசு செய்த பர்னபாஸ் என்பவரின் பெயரை தூக்கி கடாசிவிட்டு, தற்போதைய அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளரான கருணாகரனே தொடரட்டும் என்று எந்தவித கடிதமும் கோவை டயோசீசனுக்கு அனுப்பாமல் விட்டு விட்டாராம். இந்நிலையில், ஆயர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற கருணாகரன் ஒரு சில நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு தற்போது தெம்பாக சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டு டயோசீசன் அலுவலகத்தில் உள்ள தனது அறையில் வந்து உட்கார்ந்துகொண்டு விட்டு செல்கிறாராம். அத்துடன் மீசை அண்ணாச்சி உடன் சேர்ந்தாள் தனது பெயர் டேமேஜ் ஆகிவிடும் என்று சிலபேர் அறிவுரை சொன்னதால் தற்போது அண்ணாச்சியை பார்த்தாள் விலகிச் செல்ல தயாராகி விட்டாராம்.

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அலுவலகத்தில் இந்த அக்கப்போர் என்றால்… திருப்பூர் பவுல் சர்ச்சில் உப்புகாரன் சுமார் 500 போலி நபர்களின் பெயரை கொடுத்து இவர்களையும் மெம்பராக ஆக்குங்கள் என்று அந்த சர்ச்சின் பொருளாளர் லாசர், செயலாளர் ஜெயக்குமாரிடம் வம்பு செய்கிறாராம். ஏற்கனவே, இந்த உப்புகாரன் 750 போலி நபர்களை உறுப்பினராக்கி சர்ச்சு தேர்தலில் ஓட்டு போட வைத்த காரணத்தினால் அந்த வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிஷப் திமோத்தி ரவிந்தரின் சிபாரிசு நபரான டேவிட் பர்னபாஸ் நியமன விவகாரத்தில் மாடரேட்டர் தர்மராஜர் ரசலம் நாடார் மதில் மேல் பூனையாக இருந்து வருகிறார். திருப்பூர் பவுல் சர்ச் அட்டக்கத்திக்கு பதிலாக எட்வின் ராஜ்குமார் என்பவரை பிஷப் திமோத்தி ரவீந்தர் கூடிய விரைவில் திருப்பூர் பவுல் சர்ச் ஆயராக நியமனம் செய்வார். என்று பவுல் சர்ச் மண்ணின் மைந்தரான ஒருவர் மேற்படி தகவல்களை நம்மிடத்தில் ரிலே செய்கிறார்.உனக்கு குறித்திருக்கிறதை நான் நிறைவேற்றுவேன்.! ஆமென்