“சசிகலா வருகை அதிர்வலைகளை ஏற்படுத்தும்”!பிரபல இயக்குனர் கருத்து !

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலா வரும் போது அரசியலில் ஒரு சில அதிர்வுகள் ஏற்படும் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வழியில் சசிகலா பயணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சசிகலா விடுதலை செய்யப்பட்ட நாளில்,அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் திறந்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார்.

தமிழக அரசு ஆறுபடை வீடுகள் இருக்கும் அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் ,

காப்பவர்கள் கைகளில் மட்டும்தான் வேல் இருக்கவேண்டும் என்றும் , கெட்டவர்கள் அதனை கையிலெடுத்தால் அது அவர்கள் மீதே பாய்ந்துவிடும் என்றும் கூறினார் .