சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு!

Filed under: அரசியல் |

சமீபத்தில் சசிகலாவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கில் தற்போது பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அனைவரும் இணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என பேசியிருந்த ஓபிஎஸ், சசிக்கலா, தினகரனுக்கும் அழைப்பு விடுப்பதாக கூறியிருந்தார்.

தற்போது தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும், சசிகலாவும் சந்தித்துக் கொண்டனர். அப்போது சசிகலா அவருக்கு இனிப்புகளை வழங்கினார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கட்சியில் சேர்ப்பது குறித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு தற்செயலாக நிகழ்ந்ததாகவும், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையென்றும் கூறியுள்ளார்.