சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

DSC_74580முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி (சட்டப்படியான) முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதியாகிவிட்டதாக தலைநகரில் கூறுகிறார்கள். தமிழ் குலத்திற்கு துரோகம் செய்ய நினைத்த எட்டப்பர்களையும் மாற்றுமொழி பேசி தமிழ்நாட்டில் வசிக்கும் சுயநல அரசியல்வாதிகளையும் தமிழ்தாய் புறக்கணித்து விட்டாள். அதிர்ந்துபோன கர்நாடக சுயநல அரசியல்வாதிகள், தற்போது புதிய திடடத்தை நடைமுறை படுத்த உள்ளதாக கர்நாடக வட்டாரங்கள் கூறுகின்றன. 192 டி.எம்.சி. அளவில் பெரும்பான்மைக்கு சிறிது குறைத்து மைசூர் அருகே உள்ள பிலிகுண்டு மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். மீதமுள்ள நீர் ஒகேனக்கல் அருவிமேல் உள்ள மேக்கேதாட்டு மூலம் திறந்துவிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி தற்போது நீர்வீழ்ச்சியாக வரும் ஒகேனக்கல் அருவியின் மீது உள்ள மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்டப்படும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை சட்டப்படி செய்யும் நோக்கத்தில் கர்நாடக அரசு உள்ளது. சென்ற தி.மு.க. ஆட்சியில் இதைப்பற்றிய வதந்திகளை நம்ப மறுத்து ஏமாற்றப்பட்டார்கள் என்ற கருத்தும் உலவுகிறது. முல்லைபெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற தமிழக உரிமைகளை பெற்று தந்த தமிழக முதல்வரை தமிழகம் கைகூப்பி வணங்குவதாக கூறுகிறார்கள்.
அடுத்தது இலங்கை பிரச்னையில் இலங்கை அதிபர் தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளார். இந்திய பிரதமரின் கண்டிப்பான பேச்சு இலங்கையை மிரளவைத்துள்ளதாம். நட்பு நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் தற்போது இலங்கை பிரச்னையிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிபர் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்காவிட்டால், இலங்கை தமிழ்நாட்டுடன் இணைக்கப்படும் நாள் அதிக தொலைவில் இல்லை என்று உலக தமிழர்கள் எச்சரிக்கிறார்களாம்.
திருவரங்கம் ரங்கநாதர் கோவில் இறைவன் நடமாடும் புண்ணிய ஆலயம். இங்கு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்ட தேவதைகள் நள்ளிரவில் எழுந்து நடமாடும் அதிசயத்தை கண்ட பணிபுரிபவர்கள் அதிகம். காளி இக்கோயிலை இன்னும் காத்து வருவது பணிபுரிந்தவர்கள் நன்கு உணரப்பட்ட உண்மை. தற்போது பணத்திற்கு ஆசைப்பட்டு மந்திர உச்சாடனங்கள் குறைந்தது மட்டுமின்றி, நடக்கவேண்டிய பூஜை முறைகள் தளர்ந்து விட்டதாக வைணவ பக்தர்களின் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்கலை சம்பிரதாயத்தை கொண்ட திருவரங்க கோவிலில் மணியக்காரர் ஏலம் மூலம் நியமிக்கும் முறை இருந்ததாக கூறுகிறார்கள். லட்சங்கள் கொடுத்து நியமிக்கப்பட்ட மணியக்காரர், பெருமாளை மதிக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்ட பட்டர்களை நியமித்து, அதிரடி வசூலில் இறங்கிய நிகழ்ச்சிகள் நடந்ததாக கூறுகிறார்கள்.
இதனால் கடுப்படைந்த பக்தர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்படி தற்போது திருவரங்க கோவில் நிர்வாகம் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் மணியக்காரரை நியமிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நியமிக்கப்படும் மணியக்காரரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேதம் கற்ற பண்டிதர்களின் குழு அமைக்கப்படவேண்டியது அவசியம். மணியக்காரரின் தனிநபர் ஒழுங்கு மிகவும் அவசியம். தமிழக முதல்வரை காக்கும் அரங்கநாதருக்கு இறைப்பணிகள் முக்கியமாக வேத மந்திர உச்சாடனங்கள் முறையாக நடத்தப்பட வேண்டிய அவசியத்தை வைணவ பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நாத்திகம் பேசி ஆன்மிகத்தை அலட்சியம் செய்யும் அறிவாளிகள் நள்ளிரவில் இறைவன் நடத்தும் அற்புதத்தை பணிபுரிபவர்கள் மூலம் உணர்ந்து தெளிவு பெறுவது நல்லது என்ற கருத்து உலவுகிறது. இறைவனுடைய சன்னதியிலிருந்து வேத மந்திரங்கள் அறியாத பண்டிதர்களை அப்புறப்படுத்துவது நல்லது என்ற கருத்து பக்தர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ராமேஸ்வரம் திருக்கோவிலில் முறையற்ற பழக்கங்கள் கொண்ட நபர்கள் இறைவன் சன்னதியில் அமர்த்தப்பட்டு இறைவனுடைய கோபத்தை அதிகரித்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்க அதிகாரிகளையும், ஆன்மிகவாதிகளையும் மதிக்கத்தெரியாத இந்த நபர்கள் தமிழக பண்புகளை அடியோடு ஒழித்துவிட்ட அவலம் தொடர்வதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கோவில்களில் இறைப்பண்புகள் அதிகம் கொண்டவர்களை இறைவன் சந்நிதியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்ற கருத்து உலவுகிறது. அமைச்சர்கள் மாற்றப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறதாம். சட்டசபை தேர்தலுக்கு ஆதரவாக, வட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் பின்னணிகள் கவனமாக பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கட்சி பேரை சொல்லி பஜனை பாடி வந்த செயல் திறனற்ற வட்டச்செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் நீக்கப்படும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.