சண்டிகரில் பல்கலைகழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை!

Filed under: இந்தியா |

மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரத்தால் சண்டிகரில் பல்கலைக்கழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டார். பல்கலைகழகத்தில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கிஇடையே மாணவிகள் சிலர் தங்கள் வீடியோ வெளியாகிவிடுமோ என பயந்து தற்கொலைக்கு முயன்றதாக வதந்திகள் வெளியாகின. ஆனால் யாரும் தற்கொலைக்கு முயலவில்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்ததை தொடர்ந்து பல்கலைகழகத்தில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகம் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.