ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அப்படகில் இருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.