ஆந்திர அரசு எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாக சந்திரபாபு நாயுடு கடும் குற்றசாட்டு!

Filed under: இந்தியா |

ஆந்திர அரசு எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாக சந்திரபாபு நாயுடு கடும் குற்றசாட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்போது, ​​ஆந்திராவில் உள்ள நீதிபதிகள் ஆகியோரின் தொலைபேசி எண்களை ஒட்டுகேட்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக குற்றசாட்டியுள்ளார்.

இதை விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலாகும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.