சனிக்கிழமையும் இனி விடுமுறை!

Filed under: தமிழகம் |

கொரோனா தொற்று நோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால் வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 11ம் வகுப்பிற்கு ஜூன் 27ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூன் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.