சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

Filed under: சினிமா |

செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தாக்கு ஏற்கனவே தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், அவர் மீண்டும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஷகுந்தலா” உள்ளிட்ட படம் கலவையான விமர்சனம் பெற்றது. இதுபற்றி தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்தார். இதற்கு நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிகிச்சையை தொடர வேண்டி, செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை வரும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்துள்ள சமந்தாவின் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.