சம்ந்தாவால் சர்ச்சை!

Filed under: சினிமா |

“நடிகையர் திலகம்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் “குஷி” படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

படக்குழு இதுகுறித்த அறிவிப்பில், விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள “ஆராதயா” பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. அப்பாடலில் விஜய் தேவரகொண்டா சமந்தாவின் கைகளின் மேல் தன் கால்களை வைத்திருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் பிற்போக்கான போஸ்டர் என பலர் கோபத்தில் பொங்கி எழுந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் சமந்தா இதே போன்ற ஒரு படத்தின் போஸ்டரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இப்போது தான் மட்டும் அதுபோல நடிக்கலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.