சர்வதேச விழாவிற்கு தேர்வான படங்கள் அறிவிப்பு!

Filed under: சினிமா |

வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படம் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புனேவின் 22வது சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் 2ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளளது. இந்த புனே சர்வதேச திரைப்பட விழாவில் என்னென்ன திரைப்படங்கள் திரையிடவுள்ளது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன்படி, 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் “விடுதலை,” சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்,” ஜெயப்பிரகாஷின் “காதல் என்பது பொதுவுடமை” ஆகிய தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளன. மலையாளத்தில் மம்முட்டி நடித்த “காதல் தி கோர்,” ஜோஜு ஜார்ஜ் நடித்த “இரட்டா” ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.