“சலார்” படத்தின் பிரம்மாண்டம்!

Filed under: சினிமா |

“கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றுக்காக சுமார் 750 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் சிலாகிக்கப்பட்டு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.