சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமௌலி

Filed under: சினிமா |

இயக்குனர் ராஜமௌலி பிரபாஷ் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமௌலி வாங்கியுள்ளார்.

நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக புகழ்பெற்றுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால், “ராதேஷ்யா,” “ஆதிபுரூஸ்” போன்ற படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும். இப்படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனி மற்றும் படக்குழுவிடம் இருந்து இயக்குனர் ராஜமௌலி “சலார்” படத்தின் முதல் டிக்கெட் பெற்றுக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.