சல்மான் கானுக்கு கதை சொன்ன அட்லி?

Filed under: சினிமா |

இயக்குனர் அட்லி “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது.

இப்போது பரபரப்பாக ஷாருக் கான் படத்தை இயக்கி வரும் அட்லி, சமீபத்தில் நடிகர் சல்மான் கானை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் விரைவில் அவர் சல்மான் கானையும் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஷாருக் கான் படத்தை முடித்ததும் அட்லி மீண்டும் விஜய்யை இயக்கப் போவதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தை “புஷ்பா” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.