சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Filed under: தமிழகம் |

நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய பேட்டி அளித்ததால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு மாதம் 43 ஆயிரம் வீதம் 13 ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.