சாராய ஊறல் கீழே ஊற்றி அழிப்பு !

Filed under: தமிழகம் |

கென்னடி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலை கிராம பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராணி, விஜயமுத்துக்குமார் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் 8 ஊறல்களில் கள்ளசாராயம் பதப்படுத்தியது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கீழே ஊற்றி அளித்தனர் பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கள்ள சாராய ஊறல் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.