சித்தார்த்துடன் காதல், சமந்தா பகீர் பேட்டி!

Filed under: சினிமா |

நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்ததாக நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

5 வருடங்கள் முடிந்த பின்பு தனது பழைய காதலர் பற்றி சமந்தா பேசியது சமந்தாவின் தற்போதைய கணவர் நாக சைதன்யாவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்மூடித்தனமாக சித்தார்த்தைக் காதலித்து வந்ததாகவும் அதனால் பல விஷயங்களை இழந்ததாகவும் தெரிவித்திருந்ததாகவும் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மிகவும் அசிங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் கடவுள் அருளால் தனக்கு நாக சைதன்யா கிடைத்தது தான் செய்த பாக்கியம் எனவும் கூறியுள்ளார் சமந்தா.