சினிமா டயலாக்கை மறந்துவிட்டேன்; பிரபல நடிகையின் நிலை!

Filed under: சினிமா |

80களில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை பானுபிரியா.

இவர் தமிழ், இந்தி, கன்ன்டம், மலையாளம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு ஆதர்சஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடைசியாக இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் “கடைக்குட்டி சிங்கம்“ படத்தில் நடித்தார். சமீபத்தில் இரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், உடல் நிலை சரியில்லாததால், நினைவாற்றல் இழப்பு உள்ளது. சில விஷயங்களை மறந்துவிட்டேன். இதனால், ஷூட்டிங்கின்போது, சினிமா வசனங்களை மறந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.