சினிமா பிரபலம் முதல்வருக்கு பாராட்டு!

Filed under: அரசியல்,சினிமா |

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

“பூவே பூச்சூடவா,” “நாயகன்,” “அலைபாயுதே,” “காதல் தேசம்“ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம். இவர் தேசிய விருதுகள் மட்டுமல்லாது பல விருதுகள் வென்றுள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன் கட்சி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி சர்ச்சையானது குறித்து பேசி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பிசி.ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில், “பொதுவெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஸ்டாலின் ஒரு படி முனே சென்று உண்மையைச் சொல்லியுள்ளார். உலகில் நேரடியாக தொடர்புகொள்ளும் இன்றைய நாளில் அவர் தனித்து உயர்ந்து நிற்கிறார்” என பதிவிட்டுள்ளார்.