சின்னதுரையின் கல்லூரி படிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரையை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. அருகில் இருந்தோர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரையை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நெல்லை நாங்கு நேரியில் 12ம் வகுப்பு மாணவன் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாணவனை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்! நாளைய தமிழ் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்…’’ என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.