சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் ஹன்சிகா!

Filed under: சினிமா |

“மஹா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான “மஹா” படத்தின் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் நாளடைவில் குறைந்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான “மஹா”வில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் இப்போது சிம்புவின் “மாநாடு” ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் “மஹா” படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்போடு படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.