சிம்புவை காயடித்த ஹன்சிகா, நயன்தாரா!

Filed under: சினிமா,தமிழகம் |

hansika-mom-is-angry-with-simbyசிம்பு – நயன்தாராவை காதலித்து ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் அவருடன் உறவாடிய அந்தரங்க காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டு அவமானப்படுத்தினார். இப்போது சிம்புவுடன் மீண்டும் நடிக்க நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் தரப்பில் ஒரு கோடி ரூபாய் தர சம்மதித்தனர். மீதம் 50 லட்ச ரூபாயை என்னுடைய சம்பளத்தில் பிடித்துக்கொண்டு நயன்தாராவிடம் கொடுத்துவிடுங்கள் என்றார் சிம்பு.
மறுபடியும் நயன்தாராவிடம் கடலைபோட்டார் சிம்பு. உஷாரான நயன்தாரா நடிப்பதோடு நிறுத்திக்கொள் என்று எச்சரித்தார். அத்துடன் ஒன்றரை கோடி ரூபாயை செட்டில் செய்தால்தான் படப்பிடிப்பிற்கு வருவேன் என்று நிபந்தனை வைத்தார்.
தயாரிப்பாளர் தரப்பில் சிம்புவிடம் கேட்டபோது, நான் ஐம்பது லட்சம் தரமுடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். இதனால் கொடுத்த கால்ஷீட்டை ரத்து செய்துவிட்டு, வேறொரு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் நயன்தாரா. படம் பாதியில் நின்றதால் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் தயாரிப்பாளர் வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
ஹன்சிகாவுடன் காதல் தோல்வியடைந்ததால் சிம்பு & ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘வாலு’ படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதனால் மனம் நொந்துபோன சிம்பு மீண்டும் சாமியார் வேடம் போடுகிறார். ஆன்மிகத்தை தழுவிவிட்டேன் என்று நண்பர்களிடம் செமையாக அறுத்து தள்ளுகிறார் சிம்பு.